SMS Public Charitable Trust

ஸ்ரீ மஹாதேவி சத்சங்கம் ஆம் ஆண்டு சிறிய அளவில் , சில மகளிரோடு காஞ்சி பரமாசாரியாரின் தீவிர பக்தையான திருமதி விஜயா சேஷாத்திரி (எ) குருப்பிரியா அவர்களால் துவக்கப்பட்டது. அவருடைய இல்லத்திலேயே தினமும் மாலை வேளையில் பகவானுக்கு பஜனை வழிபாடு செய்யப்படுகிறது . இது தவிர முக்கியமான விழாக்கள் காந்தி ஜெயந்தி , கிருஷ்ன ஜெயந்தி, பாரதியார் விழா கொண்டாப்படுகின்றன். ஜாதி , மதம் , மொழி , இன வேறுபாடு ஏதும் இல்லாமல் எல்லோரும் இச்சங்கத்தில் நாளடைவில் வேற ஆரம்பித்து இன்று சங்கம் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறது . அன்பு அமைதி போன்றவையே இச்சங்கத்தின் குறிக்கோளாகும் .

ஆன்மிகப் பணிகளின் மட்டுமே முதலில் ஈடுபட்ட சங்கம், பின்னர் சமுகப்பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. ஏழைகளுக்கு திருமண உதவி . சிறுவர்களுக்கு படிப்பிற்கு உதவி , முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் தங்கி அவ்வப்போது அவர்களுக்கு உணவு அளித்து , ஒரு நாள் முழுவதும் அவர்களுக்கு சேவை செய்தல் , ஆதரவற்றோர் மற்றும் மனநலம் குன்றியவர் இல்லங்களில் உள்ளவர்களை சுதந்திர தினம் போன்ற நாட்களில் வரவழைத்து . உணவு அளித்தல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் .அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்குதல் , காச நோயளிகளுக்கும், தொழு நோயளிகளுக்கும் ஸ்வெட்டர், கம்பளி வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை இச்சங்கம் கடந்த 22 ஆண்டுகளாக செய்து வருகிறது .

இக்காரியங்களுக்கு நல்ல உள்ளம் கொண்ட சான்றோர் பலர் உதவி செய்து வருகின்றனர் , தவிர ராதே கிருஷ்ணா, நந்தலாலா , பார்த்தசாரதி போன்ற ஆம்பிக புத்தகங்களை இச்சங்கம் வெளியிட்டுள்ளது. உலக நன்மைக்காக ஹேரமங்கள், மழை வேண்டியாகம் போன்றவை இச்சங்கத்தின் மூலம் நடைபெற்றன.

இச்சங்கம் இயங்கும் இல்லத்து மாடியில் 1995ம் ஆண்டு ஒரு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.சேலையூர் ஸ்ரீ ரமணி குருஜி அவர்களால் சலவைக்கல்லால் ஆன கிருஷ்ணர் விக்கிரகத்தை இச்சங்கத்திற்கு அளித்தார் .கிருஷனருக்கு தகுந்த அளவில் ஸ்ரீ ராதை விக்கிரகம் பைராகி மடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தாமோதர் மகந்த் அவர்கள் மூலம் சங்கத்திற்கு வழங்கப்பட்டது . அத்துடன் ஸ்ரீ குருப்பிரியவிற்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ 1008 குருப்பிரியாஜி என்ற பட்டமும் அவர்களால் வழங்கப்பட்டது .இந்த சன்னதிக்கு சான்றோர்கள் பலரும் , மடத்து துறவிகளும் விஜயம் செய்து அருளாசி வழங்கியுள்ளனர் .

இச்சன்னதியில் பகவானுக்கு வைக்கப்பட்ட பழம் பாதி கடித்து மீதம் இருந்தது பகவானுடைய பாதங்கள் பதிந்து , தற்போதும் உள்ளது. அணிவிக்கப்பட்ட மாலை மறைந்து போனது ,வாடிய துளசிமலையிலிருந்து தண்ணீர் சொட்டியது போன்ற பல அற்புதங்கள் நடந்துள்ளன் . 2006ஆம் ஆண்டு சத்சங்க உறுப்பினர்கள் பண்டரிபுரம் செல்லும் வழியில் ஒரு கொடி தயார் செய்ய கம்பு தேவைப்பட்டது . கருத்த உருவம் கொண்ட ஒரு சிறுவன் அவர்கள் முன் தோன்றி கொடி கொம்பு கொடுத்து பின்னர் திடீர் என மறைந்து விட்டார் . அது பகவான் பாண்டுரங்கநாதனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ? அந்த கம்பு பல ஆண்டுகள் உபயோகிக்கப்பட்ட கம்பு என்பது வியப்புக்குறியது.

இச்சங்கத்தின் பணிகளை விரிவுபடுத்துழம் வகையில் SMS PUBLIC CHARITABLE TRUST என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது .

மதுரா பிருந்தாவனத்திலுள்ள பிரசித்தி பெற்ற பாங்கேபி ஹாரி லிலா கிருஷ்ணன் தெய்வ விக்கிரத்தை தனியே ஒரு கோவில் கட்டி பிரதிஷ்டை செய்யவும் சமூக நலப்பணிகளை இந்த இடத்திலேயே தொடரவும் கட்டிடம் கட்ட காஞ்சி மாவட்டம் படப்பை அருகே கிரவுண்ட் மனை ஸ்ரீநிகேதன் என்ன பெயரில் வாங்கப்பட்டுள்ளது .

கட்டிடங்கள் மற்றும் சமூக நலகூடங்கள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது . அதனால் அன்பர்கள் அருள் கூர்ந்து நன்கொடை நிதியாகவோ , பொருளாகவோ வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . நன்கொடை அளிக்க விரும்புவோர் , காசோலை / டிராப்ட் – ஐ SMS PUBLIC CHARITABLE TRUST என்ற பெயரில் எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .இது குறித்து மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள, ஸ்ரீ மதி குருப்பிரியா (2239 3353) அல்லது திருமதி ரத்தினம் (2239 1452) அவர்களை அணுகவும் .

இதை உத்தேசித்து செய்யப்பட்டுள்ள பணியில் அனைவரும் பங்கு கொண்டு யாவருக்கும் சொந்தமான பிருந்தாவன லிலா கிருஷ்ணனின் .ஸ்ரீ ராதா கிருஷ்ணனின் கருணைக்கும் அருளுக்கும் பாத்திரமாகும் படி இருகை கூப்பி வணங்கி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோதம்.

இப்படிக்கு
SMS PUBLIC CHARITABLE TRUST